பாரதியின் தூது

பாரதியின் தூது...
எழுத்து :மருதுபாண்டியன். க


காலனே காத்திரு
எனக்கு வேலையுண்டு
சிந்தையின் சினத்தில் நீயும் வந்து சிக்கி விடாதே ..

சிவனென்றால் நெற்றிக்கண்ணால் எரிப்பாராம்...
தீண்டாமையே ஓடி விடு!

உனை காலன் கொண்டு தீர்த்துவிட
நான் கோழையில்லை...
என் நகக்கண்கள் சீறி திறந்தால்
எழுத்துக்களால் எரித்து
சாம்பலென்று உனை
பூசிக்கொள்வேன் ...
நானும் சிவன்தான்!!
தீண்டாமையே ஓடி விடு ...


தீண்டாமை பேயே
பொய்சொல்லி எங்களை
பிரித்து
பிணங்கள் என தின்ன பார்த்தாயா ...
உன் தலை நசுக்கி சுண்டைக்காயை
பெரிதாக்கும் வல்லமை படைத்த வழிப்போக்கர்கள்
நாங்கள் ..

தீண்டாமை பள்ளியில்
சாதிகளின் களியாட்டாமா
ஓடி விடு ...
உனைத்துரத்த ஆயுதங்கள் வேண்டாம்
இதோ தொடங்கிவிட்டோம்
பாரதியின் மந்திரத்தை
காந்தியின் தத்திரத்தை
எங்கும் ஒலிக்கும்
இனி எங்கள் சகோதரத்துவம் பாடல்கள்...

வெள்ளையனை வெளியேற்றி
பத்திரமாய் உனை பார்த்துக்கொள்ள
நீ யென்ன
எங்கள் மனிதமா...
நீ யாரா?
சமூகக்கண்ணாடி கூறும்
பேய்களுக்கு அலங்காரம்
சாதிகளுடன் ஒய்யாரமாய் நீ
காரி உமிழ்வது எங்கள் மரபல்ல ...


மரணம் எங்களுக்கு புதிதல்ல
நீயோ கொலை செய்யும்
குற்றவாளி ...

தீண்டாமையே
சாதிகள்
இல்லையென
திருந்திவிடு..
இல்லையேல்
ஓடிவிடு ...
உனைப்போல் இங்கு பலருண்டு
துரத்தி விரட்டுவது எங்கள்
கடமை ..
பெற்ற சுதந்திரம் பேணிக்காப்பது
எங்கள் உரிமை ....

தூது வந்த
காலனே
பாரதியிடம்
கூறிவிடு
அவரின் ஆணையினை
பேணிக்காப்போம் என்று ...


பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்கும் சகோதரத்துவ மனிதங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் ....

எழுதியவர் : மருதுபாண்டியன். க (17-Aug-16, 8:18 pm)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
பார்வை : 612

மேலே