மெளனம் வீண்
நான் எந்நாளும் உன்னை
நினைத்து தவிக்க...
காதலன் முன்னே - தினம்
மெளனமாய் வந்து நின்று
நடிக்காதே -பெண்ணே...!
ஏதும் புரியாதது போலே
நீ தினம் இருப்பதினாலே
மேலும் - உன்னை
இரசிக்காமல் இருப்பேனா -என்ன?
உன் திட்டத்தை விரைவில்
நான் போட்டு உடைக்கத்தான் போறேன்...
உனக்குள் - நான்
நிறைந்திருப்பதை
முதன் முதலில்
நீ கண்டபோதே...
அறிந்து கொண்டவன் நான்..!
இன்னும் உன் மெளனத்தை
வளர்ப்பது வீண்..!