ஊசி

மாயப்பெண்
அடியே ...
அடி அடியாய்
உன்னால் எழுதிய வரிகள்
எல்லாம் இன்று மறைந்துவிட்டதே....
நீ மாயப்-பெண்-ணோ ....
===============================
பயந்து ஓடிய பசி
வலுக்கட்டாயமா ஹோட்டலுக்குள்
என்னை இழுத்துச்சென்ற பசி ....
விலைபட்டியலை கண்டதும்
பயந்து ஓடி விட்டது....
என்ன வேண்டும் என்றார்கள்...
ஆர்டர் செயதேன் மீண்டும் வருக என்பதை
அழிக்க சொல்லி...
==============================
பறக்கும் படை
தேர்வு அறையில் மாணவர்கள்
தலைக்கு மேல் பறந்து சென்ற சிட்டுக்குருவிகள் ...
இதுதான் பறக்கும் படையோ.....
===============================
உண்ணாவிரதம்
உண்ணாவிரத போராட்டம்.......
போஸ்டரை தின்று விட்டு
ஏளனமாய் ஏப்பம் விட்டது கழுதை.....
===============================
காதல் கிசுகிசு
என் சூடு தணிக்கும் தீனியோ...
சூடு ஏற்றும் தீ நீயோ....
இன்னும் உன்னை நீரூற்றி அணைக்க கூட இல்லை...
அதற்குள் கிளம்பிவிட்டது புகைச்சல் - காதல் கிசுகிசு .......
================================

எழுதியவர் : மா . யுவராஜ் (19-Aug-16, 4:53 pm)
சேர்த்தது : யுவராஜ்மா
Tanglish : oosi
பார்வை : 88

மேலே