இவளை தவிர வேற யாரு அழகி

*
தேவதைகளின் முத்து
சிதறலில் முளைத்தாளா
*
சிக்கு கோல புள்ளியில்
ஒளிந்து இருந்தாளோ
*
வானவில்லோடு ஒட்டி இருந்தாளா
சிட்டுக்குருவியின் கூட்டில் இருந்தாளா
*
வளரி கண்ணால் வழி மறித்தால்
அரையன் என்னாவேன்
அடி அரக்கனாய் வாழ்ந்தவன்
கிறுக்கனாய் போகிறேன்
*
குமரி நீ கன்னியாகுமரி
அந்த சூரியனும் உன்னில்
அடங்கும்
*
பூங்காவில் விளையாடும்
குழந்தைகள் தான் உன்
பேச்சு அடி
*
என் மணம் திருடியவளே
மணம் விட்டு பேசு
*
விடியல் பறவைகள் என்
வாசல் வந்து கூச்சல் போதுமே
நீ எழுந்தால்
*
அந்த மரணமும் நீ என்றால்
உன் மடியில் விழுந்து கிடப்பேனே
அடுத்த ஜென்மம் என்ற ஒன்று இருக்கும் வரை

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (19-Aug-16, 8:58 pm)
பார்வை : 788

மேலே