காஞ்சிக் கவிஞன்

காற்றாய் நீ கறைந்தாலும்
உன் கவி வரிகள் இருக்குதடா
தரணியை விட்டுப் பிரிந்தாளும்
தமிழோடு உன் உயிர் ஒட்டிக்கிடக்குதடா
காஞ்சி மண்ணில் நீ வைத்த
கால் தடங்கள் என்றும் அழியாது
காலத்தின் அலைகளால் அதை அழிக்கவும் முடியாது
கவியால் புவியாண்டது போதும் என்று
புற உலகம் ஆளப் புறப்பட்டுவிட்டாயோ?
வரிகள் அள்ளிக் கொடுத்த வள்ளலே
உன் வெற்றிடம் நிரப்ப முடியுமோ?
போய் வா எம் பூமகனே
போய் பொன்னுலகம் வென்றுவா..