காணவில்லை என் மகனை

காணவில்லை என் மகனை

யுத்தம் என்ற
பெயரிலே..
நாமும்...
காணி நிலம்
இழந்தோம்....

வாழ்ந்த
வீடுகளை
பிரிந்தோம்..
பண்டங்கள்
பணங்களினை
தொலைத்தோம்..

இன்பங்கள்
மறந்து
துன்பங்களை
வரமாய்
பெற்றோம்..

பசியில்
வாடினோம்...
பட்டினியில்
துடித்தோம்..
மரணத்தை
நெருங்கியும்
தப்பி பிழைத்தோம்..

பெற்றோரை
இழந்தோம்..
அரவணைத்த
உறவுகளை
இழந்தோம்..
தோள் கொடுத்த
தோழர்களை
இழந்தோம்...

அனைத்தையும்
இழந்தும்...
இறுதி வரை
நம் மகனும்
நம்முடன்
இருப்பானென
நம்பியே..
வாழ்வதையும்
தொடங்கினோம்...

அவனையும்
ஒரு நாள்
விசாரணை என்ற
பெயரிலே
கூட்டி சென்றனர்
அவர்களும்....

இன்று வரை
அவனை
காணவில்லை
நானும்....
என் மூச்சு
நிற்பதற்குள்
ஒரு நொடியேனும்
அவனை
காணுவேனா
நானும்......??


இது பத்திரிகையில் பல தாய்மார்களின் மனக் குமுறல்களை வாசித்த போது என்னுள் தோன்றியது..
தாய் மகனையும்,மனைவி கணவனையும்,தங்கை தமையனையும்,பிள்ளைகள் தந்தையையும் என இந்த தேடல் பயணம் நீண்டுகொண்டே செல்கிறது..இன்னும் அவர்களுக்கான விடை தான் கிடைக்கவில்லை.....

அன்புடன் சகி

எழுதியவர் : அன்புடன் சகி (20-Aug-16, 4:37 pm)
பார்வை : 151

மேலே