முயற்சியோடு நீ முயன்றுபார் 555
தோழா...
எறும்புகளை போல சுறுசுறுப்பாய்
இரு என்பார்கள்...
எறும்புக்கு
கண்கள் இல்லையாம்...
கண்கள் இல்லாத
எறும்புகள் எல்லாம்...
முகர்ந்துகொண்டே
முன்னோக்கி செல்லும்போது...
உன் இருகண்களில் பார்வை இருந்தும்
சோம்பேறியாக இருப்பது ஏன்...
வானவில் எப்போதாவதுதான்
விண்ணில் தோன்றும்...
எப்போதோ வரப்போகும்
வாய்ப்பிற்காக நீ காத்திருப்பது ஏன்...
உனக்கென புது பாதையை
உருவாக்கு நீ...
முயன்றுபார் விண்ணின் வானவில்லை
தொடுமளவிற்கு நீ வளரலாம்...
முயற்சியோடு நீ முயன்றுபார்
நாளை உலகம் உன் கையில்.....