கவுரவம்

கவுரவம்
*********

அன்று ஒருநாள்
நடுத்தர வர்க்கத்தின்
குடும்ப கல்யாணம்...

வீட்டுக்கு ஒரே பிள்ளை.. அதனால்
கொஞ்சம் செல்லம் அதிகம்தான்...

பொண்ணுவீடும்,
மாப்பிள்ளைவீடும்
தங்கள் கவுரவத்தை காப்பாத்த
கல்யாணத்தை தடபுடலா செய்றாங்க...

மண்டபம் கொஞ்சம் பெரியதுதான்...

பொண்ணு வீட்டாரையும்,
மாப்பிள்ளை வீட்டாரையும்
கூட்டினால் கூட்டம்
ஆயிரத்தை தாண்டும்...

அவ்வளவு சொந்தம்
அவர்களுக்கு...

தெரு முக்கிலிருந்து மண்டபம் வரை
பொண்ணையும் மாப்பிள்ளையையும்
சேர்த்துவைத்து எடுத்த
போட்டோ போட்ட பிளக்ஸ் போர்டு...

அதில்
'நண்பனை வாழ்த்த...
அண்ணனை வாழ்த்த...'
என்று
சினிமா பஞ்ச் டயலாக் வேறு...

குறிப்பாக அதில்
'வாழ்த்த வயதில்லை' என்று...
அந்த வீட்டு,
குட்டிப் பசங்க புகைப்படம் வேறு...

அறுசுவை உணவும்
அள்ளி அள்ளி பரிமாறப்பட்டது
பந்தியில்...

கல்யாணத்துக்கு வந்த
பெருசுங்க பாதிபேர்
சொன்ன வார்த்தை...

"நம்ம முத்துச் சாமி
தன் ஒரே மகன் கல்யாணத்தை
ஜாம் ஜாம்னு முடிச்சிட்டானேப்பா..!

எப்படியும்
பத்து லட்சம் செலவாகியிருக்காது...!!"

கல்யாணமாகி நாட்கள்
சொல்லாமல் கொள்ளாமல்
ஓடுது...

திடீர்னு ஒருநாள்...
அதாவது இன்று...

மாப்பிள்ளைய பாக்க
சொந்தக்காரர் ஒருத்தர் வாரார்...

"என்ன மாப்ள...
வேலைலாம் எப்படி போகுது...?"

"இல்ல மாமா
சொந்தமா தொழில் பண்ணலாம்னு
இருக்கேன்...

பேங்க்ல
அஞ்சு லட்சம் லோன் கேட்டுருக்கேன்...
வந்தவுடனே பிசினஸ்
ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்..."
********
********

அன்று
கவுரவம் பாக்காம
அந்த பத்து லட்சத்தை சேர்த்து வச்சிருந்தா...!

இன்று
கவுரவமா தொழில் தொடங்கியிருக்கலாம்...!!

இவண்
✒க.முரளி ( spark MRL K)

எழுதியவர் : க.முரளி (20-Aug-16, 9:32 pm)
Tanglish : kavuravam
பார்வை : 455

மேலே