​மழலையின் அச்சம்

​ஒருவயது மழலை
ஒளிந்திருந்து பார்க்கிறது
ஒற்றுமையிலா உலகை ..

மிரட்சியுடன் நோக்குகிறது
மிதிபடும் சமுதாயத்தை
மிரட்டிடும் சமூகவிரோதியை ...

அச்சமுடன் பார்க்கிறது
அழிந்திடா சாதிமதத்தை
அரசியல் அராசகங்களை ..

பிறந்ததே தவறென்று
பிஞ்சுமனம் நினைக்குதோ
பிள்ளைமனம் துடிக்குதோ ...

வழிநடத்த எவருமில்லை
வருத்தமுடன் நிற்கிறது
வருவோரை காணுகிறது ...

பயமறியாப் பருவமே
பாதையறியா காலமே
பாவமது பால்யமே ....

இந்நிலை வந்திட
இயற்கை காரணமா
இச்சமூக மாற்றமா ...

சாதிமதம் மறைந்திட்ட
சமுதாயம் தோன்றுமா
சமநிலையும் வந்திடுமா ....

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (20-Aug-16, 9:36 pm)
பார்வை : 142

மேலே