வருந்துகிறது மனமும் ​

உழைப்பது தவறில்லை
பிழைத்திட வழியில்லை
கைவிட்ட குடும்பத்தால்
கையிலெடுத்தத் தொழிலிது
வருந்துகிறது மனமும்
வழிந்திடும் வயோதிகத்தால் !

மூதாட்டியும் தளராது
முகம்காட்ட விரும்பாது
முனைப்புடன் செயல்படுது
முடியாத நிலையிலும்
முச்சந்திக் குப்பைகளை
முடிந்தவரை சுமக்கிறது !

முகமூடி அணிந்திட்டு
முகாமிடும் முனிவர்களும்
முட்டிமோதும் பக்தர்களும்
முதியோரின் துயர்நீங்க
முற்றுப்புள்ளி வைத்திட
முன்மொழிவீர் இனியேனும் !

முதியோரைக் கண்டாலே
முகம்சுளிக்கும் காலமிது
முன்னேறிய உலகிலும்
முன்வந்து உதவாமல்
முடங்கியே நிற்கிறது
முணுமுணுக்கும் உள்ளங்கள் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (20-Aug-16, 9:40 pm)
பார்வை : 150

மேலே