சம்பள நாள்
![](https://eluthu.com/images/loading.gif)
காலை கதிரவன்
இதமான சூட்டில்
தன் ஒளிக்கதிர்களை பரப்பியவாறு மெதுவாக உதிக்கின்றான்......!
இளந்தென்றல் மெல்ல
வருடியது அவ்தேயிலை
செடிகளை........!
சூரியன் வரவை எதிர்பார்த்து
தம் இலைகளிலே நீர் துளிகளை
ஏந்தியவாறு சிரித்து குலுங்கியது
தேயிலை செடிகள்.....!
கலகலவென சிரிப்பொலியுடன்
கூட்டமாக வந்தனர்
பெண்களின் கூட்டம்.....!
அக்கூட்டத்திலே
அடுத்த தோயலில் கிழிந்து
விடுவேன் என்று
சாயம் போன
சேலையுடன் சோர்ந்து
வாடிய முகத்துடன்
வருகிறாள் கனகா.....!
அத்தேயிலை செடிகளை
கொய்கிறாள் வேகமாக... !
எவ்வளவு வேகமாக கொய்தாலும்
நாற்பது றாத்தல்களை அவள் தாண்டியதே இல்லை....!
இடை இடையே அவள்
தேயிலை கொய்கிறாள்
என்று அவளுக்கு ஞாபகப்படுத்தும்
கங்காணியின் அதட்டல் குரல்.....!
தினமும் காலையில்
கூச்சலிட்டு சண்டை போடும்
கடன்காரர் தொல்லை....!
வேலை போகாமல் இருக்கும் குடிகார புருஷன்....!
திருமண வயதை தாண்டும்
மூத்த பிள்ளை மீனாட்சி....!
பதின்மூன்று வயதை தாண்டி
இன்று வயசுக்கு வருவேன்
நாளை வயசுக்கு வருவேன்
என்று இருக்கும் அன்னம்மா....!
பள்ளிக்கு போகும் வயதில்
வீட்டுக்குள் முடங்கி
இருக்கும் பொன்னி.....!
மாதக்கடைசி சம்பள நாள்
வரிசையில் நிக்கிறாள்
கனகா- அவளின் கையில்
கணக்குப் பிள்ளை
கொடுத்தார் சம்பளத்தை....!
பேரதிர்ச்சி அவளுக்கு!
இம்மாதமும் சம்பளம்
ஆறாயிரம் ரூபாய்......!
ஐயோ..........!!!!!!!!
குடிகார புருஷன்
பறித்து விடுவானோ....?
என்ற பயம் ஒரு பக்கம்.....!
கடன்காரனுக்கு கொடுப்பதா...?
மீனாட்சியின் திருமணமா....? அன்னம்மாவின் சடங்கா....?
பொன்னியின் பள்ளிக்கா....?
வீட்டுக்கு அரிசி சாமானா....?
பெரும் குழப்பத்துடன்
சென்றாள் வீட்டுக்கு......!
கடவுளே....!
ஏன் இந்த சோதனை?
சம்பள நாள்
ஏன் தான் வந்ததோ?
வராமல் இருந்திருந்தால்........?