நெஞ்சிற்கு சில பல வரிகளை எழுதினேன்

கண்களுக்கு ஒருசொல்லோவியம் வரைந்தேன்
-----அவள் பார்த்துக் கொண்டே இருந்தாள் !
புன்னகைக்கு சொல் முத்துக்களை கோர்த்தேன்
-----புன்சிரிப்பை உதிர்த்துக் கொண்டே இருந்தாள் !
நெஞ்சிற்கு சில பல வரிகளை எழுதினேன்
-----நேச விரல்களால் புரட்டிக் கொண்டே இருக்கிறாள் !
----கவின் சாரலன்
பெண்ணின் ஓவியன் நீ ----கவின் என்ற கவிப்பிரிய ஷாபியின் பாராட்டலில்
மகிழ்ந்து போய் எழுதிய கவிதை