இறைவனுக்கு கடிதம்

நான் உலகம் பார்க்கையில்
அன்னை முகம் கண்டதில்லையே!

நிலவு காட்டி சோறு
ஊட்ட தாயுமில்லையே!

நான் துன்பப்படுகையில்
அங்கபாலிகை செய்ய நாதியில்லையே!

நான் இன்பப்படுகையில்
இன்னிசை கொடுக்க யாருமில்லையே!


உணவு கொடுத்து
பசிப்போக்க எவருமில்லையே!

நிலவு பார்த்து
உன்னை ரசிக்க வழியில்லையே!

என் தாயை பறித்த
இறைவனின் தவறை உணரவில்லையே!

என்னை கண்டு இறைவனிடம்
இரக்கமில்லையே!

அகூபாரமாய் இருக்கும்
ஏக்கத்தை புரிந்து கொள்ளவில்லையே!

என் இதயத்தில் இரத்தம் எடுத்து
எழுதுக்கோலில் அடைத்து
எழுதுகிறேன் சோகத்தையே!

இறைவனிடம் கடிதமாக...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (22-Aug-16, 7:14 pm)
பார்வை : 304

மேலே