முதியோர் இல்லம்

மூடனே...!
உன்னை கருவில் சுமந்த
தெய்வம் அவள் .....!

இமை கண்களை காப்பது
போல் பாதுகாத்தவள் அவள்...!

உன்னை பள்ளிக்கு அனுப்ப
கூலி வேலைக்கு சென்றவள் அவள்....!

நீ செய்யும் குறும்பினை
ரசித்து சிரித்தவள் அவள்...!

அமிர்தத்தினை பிசைந்து
ஊட்டி வளர்த்தவள் அவள்...!

கட்டிட வேலைக்கு சென்று
கல்லுரிக்கு அனுப்பியவள் அவள்...!

வேர்வையில் நனைந்து வேலையில்
சேர்த்தவள் அவள்...!

இறுதியில் பிழை ஒன்று
செய்தாலே அவள் ...!

உன் திருமணம்...

உயிர் கொடுத்தவளை
சிறையில் அடைத்தாய்...!

போலி அன்பு காட்டிருந்தாலும்
அகம் மகிழ்ந்திருப்பாள் அவள்...!

உன் வாழ்விற்காக பகடையாய்
பயன்படுத்தி விட்டு அவளை
பள்ளத்தில் தள்ளியது ஏனோ???

உன்னை பெற்ற கடனுக்காக
முதியோர் இல்லத்தில் செலவிடும்
மூடனே....!

அவள் கேட்பது உன் பணத்தை
அல்ல பாசத்தை...!

எழுதியவர் : Anushiya சுதர்சன் (22-Aug-16, 7:31 pm)
Tanglish : muthiyor illam
பார்வை : 216

மேலே