என் அப்பா
நான் சிறப்பாய் வாழவே
நீ செருப்பில்லாமல் அலைந்தாயே
நான் தழைத்து பூமியில் வளரவே
நீ வேராய் உன்னை மண்ணில் புதைத்தாயே
நான் மயிலாய் ஆடி திரிந்து வாழவே
நீ முயலாய் ஓடி உழைக்கிறாயே
நான் மதிப்பாய் வாழ்ந்திட
நீ பலரிடம் மிதி பட்டு வாழ்கிறாயே
என் ஆசையை நான் அடைந்திட
நீ ஆந்தையை மாறி திரிகிறாயே
காயங்கள் பல உளிருப்பினும்
என் கண் முன்
கவலையின்றி புன்னகைக்கிறாயே -என் அன்புத் தந்தையே