ஒற்றுமையின்மை

ஆதி அந்தம் இல்லா
அகன்ற கானகத்தில்
இப்போது
இலையுதிர் காலமா??
வானில் நட்சத்திர
இலைச்சருகுகள்
உதிர்ந்து கிடக்கின்றன....
பிறை நிலவுடன்
கைகோர்க்க
நடசத்திரமும்
மறுப்பதேன்?
மனிதர்களிடம்
அவையும் பாடம்
கற்றதா?

எழுதியவர் : lakshmi (27-Jun-11, 2:46 pm)
சேர்த்தது : vairamani
பார்வை : 506

மேலே