ஆபத்தை நோக்கி செல்லும் சில இளைய நெஞ்சங்கள்

வெற்றிப் பாதையை நோக்கி

வேகமாய் நடை போடும்

இன்றைய சமுதாயத்தில்

சில அவலங்கள்

கட்டுக் கடங்காமல்

கூத்தாடுது என் நெஞ்சை

வாட்டுது சதிர் ஆடுது

இது எங்கு கொண்டுபோய் விடும்

தாய் தந்தையரே சகோதர சகோதரிகளே

சற்றே யோசியுங்கள்



படிக்கும் பொன்னான பருவத்தில்

படிப்பை மறந்து , பொறுப்பை மறந்து

சில இளைய தலைமுறையினர்

பள்ளியிலும் கல்லூரியிலும்

மற்றும் வெட்ட வெளியான வீதியிலும்

இன்னும் ஓடும் வாகனங்களிலும்

கூறிய ஆயுதங்களை முதுகில் மறைத்து

ஏதோ ஆவேசத்தில் ஒருவரை ஒருவர்

தாக்கிக்கொள்ள திரிவதேன் ?

போதைப் பொருட்களுக்கு அடிமையாகி

தம்மை மறந்து திரிவேதேனோ


என் அன்பு இளைய நெஞ்சங்களே

வன்மை நம்மை வாழ வைக்காது

நம்மை அழித்துவிடும்

அன்பிற்கு அடிமை ஆகுங்கள்

நாட்டிற்கும் வீட்டிற்கும்

நல்ல பிள்ளைகளாய் மாறி விடுங்கள்

தீயோர் சேர்ப்பு என்றும் வேண்டாம்

நல்லோரை நாடுங்கள் நன்மை பெறுங்கள்

கத்திக்கு பதில் கையில் பேனாவை ஏந்துங்கள்

நீங்களும் கவிஞர் ஆகலாம்,எழுத்தாளர் ஆகலாம்

மா மேதை அப்துல் கலாம் போல்

ஓர் மாபெரும் விஞானி ஆகலாம்

நாட்டிற்கும் வீட்டிற்கும்

பெருமை மிக தேடி தரலாம்

என் அருமை இளைய தலை முறையே

இந்த மூத்தோன் வார்த்தைக்கு சற்றே

மதிப்பு தரலாமே முயன்று பாருங்கள்


தாய் தந்தையரே ஆசிரிய திலகங்கள்

தவறு செய்யும் இளைய நெஞ்சங்களை

கண்டு கொள்ளுங்கள் அவர்களை

திருத்தி நல்ல பாதையில் அழைத்து செல்லுங்கள்

அழகாய் வாழ விடுங்கள் . .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Aug-16, 7:09 pm)
பார்வை : 48

மேலே