ஒரு தலை காதல் -2

காதலில் இவை


உன் விழியும்
என் விழியும் இணைந்து
உருவானது தான் நம்
காதல் பெண்ணே !

உன் பார்வையால்
உருவான காதல் மழையின்
மன்மத வெள்ளத்தில்
காணாமல் போனேன்
கரை சேர்வேனே உன்
காதலை என்னிடம் சொல்லும்
பச்சத்தில் பெண்ணே !

பொன் எழில் முகத்தில் மஞ்சள் பூசியும்
பூ எழில் மலர் மாலையை கழுத்தில் சூடியும்
புன்னகை பொண்ணை உதட்டில் சூடியும்
கனவில் காதல் சொல்ல
எனை நோக்கி ஓடி வரும்
என்னவளே இக்கனவு பலிக்க
இறைவனை முதல் முறை வேண்டுகிறேன்
இச்சொல்லால் ``இறைவா என் கனவு
சீக்கிரம் பலிக்க வரம் கொடு `` என்று !

நீ செய்யும் சிறு சிறு
செய்கைகளையும் மிகப்பெரிய அளவில்
ரசிக்கும் உன்
ரசிகன் நான்
உயிரே உணர்வாய் இதை
உனை தவிர வேறு எதுவும்
எனக்கு அழகாய் தெரியவில்லை !

அடித்து நொறுக்கினாய் உன்
அழகால் எனை
இனியும் பிழைக்க மாட்டேன்
இனியவளே காதல் நோயில்
அவதிப்படும் நான் !

உனை கவனிக்க யாரும்
இல்லை என்று ஒரு பொழுதும்
கலங்காதே கண்ணே
நொடிநொடி உனை பற்றியே
சிந்திக்கும் என் உள்ளம்
உயிருடன் இருக்கும் வரை நீ !

துன்பம் ஒரு நாள்
இன்பம் ஒரு நாள்
என என் வாழ்வில்
மாறிமாறி விளைவிக்கும் வினைகாரியே!
இது விதியா ! இல்லை
விதியே நீ என இருக்கும் உன் மீது கொண்ட
என் காதல புரியவில்லை
எனக்கு !

என் காதல் தோற்றாலும் காதல்
தோல்வியில் நான் துவண்டு கண்ணீர்
கொண்டு நின்றாலும் எனை
தேற்ற உன் நினைவுகள்
என்னிடம் உண்டு அது போதும்
எனக்கு என் காதல் தோல்வி
கொள்ளாது ஒரு போதும்
நீ எனை வெறுத்தாலும் !

எழுதியவர் : அன்னை ப்ரியன் மணிகண்டன் (24-Aug-16, 7:00 pm)
பார்வை : 165

மேலே