ஒரு போராளியின் காதலும் கண்ணீரும் கலந்த சரித்திரம். பாகம்-2

புத்தகங்களை சுமக்க வேண்டிய கையில் விறகுகள் சுமக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டாள் வினோ. அவள் தான் பள்ளி செல்லாததை நினைத்து வருந்தவில்லை. ஆனால் தன் தங்கை கல்வி கற்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒருநாள் இரவு தன் அத்தையிடம் சென்று
"அத்தை என்ட தங்கைச்சிய படிக்க முன்பள்ளியில சேர்த்து விடுங்கோ...." என்று அழுது கொண்டு கேட்டாள். அதற்கு அவள் அத்தை...
"சனியனுகளுக்கு சாப்பாடு போடுறதே பெரிய விசயம் அதுக்க படிக்கவாம் போடி போய் உன்ர வேலைய பாருடி " என்று கூறி அவளுக்கு காலால் உதைத்தார்.
பசி வேறு அழுதபடி சென்று தூங்கி விட்டாள். சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டன.நாய்க்கு கொடுக்கும் சாப்பாட்டை விட கேவலமான சாப்பாடு. எனக்கு பரவாயில்லை என் தங்கை பாவம் குழந்தை எப்படி தாங்கிக்கொள்வாள்? என்று தன் மனதுக்குள் கூறிக்கொண்டு தினம் தினம் கண்ணீர் வடிப்பாள்.வேறு என்ன தான் அவளால் செய்ய முடியும்?
அத்தைக்கு திருமணம் முடிந்து ஆறு வருடங்கள் ஆகி விட்டது.ஆனால் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. அவள் மாமா அதாவது அத்தையின் கணவன் அத்தை என்ன சொன்னாலும் தலையாட்டி பொம்மை போல் தலையாட்டுவார்.ஆனால் வினோவுக்கும் அவள் தங்கைக்கும் நடக்கும் கொடுமைகளை பார்த்து அவள் அத்தையின் உறவினர்கள் அனைவரும் சிரிப்பார்கள்.ஏனெனில் அவர்களும் அவளைப் போலவே கல் மனம் படைத்தவர்கள்.
வினோவுக்கு ஒரு தோழி இருந்தாள். பெயர் அவள் மலர் பக்கத்து விட்டு பெண். இருவரும் சேர்ந்து தான் விறகு முறித்து வருவார்கள்.அப்போது வினோ தனக்கும் தன் தங்கைக்கும் அத்தை செய்யும் கொடுமைகளை சொல்லி அழுவாள். மலர் ஆறுதல் கூறுவாள்.
ஒருநாள் இரவு அத்தையின் தாயார் வந்திருந்தார்.அத்தையும் அவள் தாயும் கதைத்தது அவள் காதுகளில் விழுந்தது. அவர்கள் அவளின் வீட்டுக்கும் சொத்துக்கும் தான் அவர்களை வளர்க்க முன் வந்ததார்களாம் என்று அத்தை அவரின் தாயாருக்கு கூறினார்.அவள் மனதுக்குள் அழுதாள். அம்மா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?என்று....
மறுநாள் வினோ வழமை போலவே விறகு வெட்டி வந்து விட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தாள்.யாரோ சிலர் வந்திருந்தனர்.அவர்கள் புதுமுகங்களாக காணப்பட்டனர்.
" வினோ வினோ இங்க வா....."
என்று அழைத்து அவர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு சென்றுவிட்டாள் அவள் அத்தை.எதுவுமே புரியாத வினோ வீட்டுக்குள் சென்று விட்டாள்.
ஆனால் அன்று இரவு தான் அந்த சம்பவம் நடந்தது...........
தொடரும்.....................