அன்பு மகள்

அழகானக் கூட்டில் அன்றிலாய் வந்தாய்...
ஆனந்த மழையில் நாளும் நனைந்தாய்...
இதயத்தில் நுழைந்து இன்னிசை தந்தாயே...
ஈன்ற மகளாய் இதழ்களின் சிரிப்பாலே......
உச்சிதனை முகர்ந்தேன் உலகை மறந்தேன்...
ஊற்றுநீராய் உள்ளத்தில் உவகை நிறைந்தேன்...
எச்சிலின் ஈரத்தில் எள்ளாய் சிறுத்தேனே...
ஏகாந்த வெள்ளத்தில் மூழ்கித் திளைத்தேனே......
ஐம்பொன் சிலையே அன்னக் கொடியே......
ஒற்றைவிரல் நெஞ்சம் தீண்டினால்
ஓர்நொடியில் இறந்தாலும் உயிர்த்தெழுவேனே......
ஔடதம் உனதன்பாய் கிடைத்தால் வாழ்ந்திட
அஃதே போதுமே......