கனவு கொலைகள்

உடைஞ்சி போச்சு
கண்ணாடி போல
கண்ணு முன்னாடியே
உடைஞ்சி போச்சு
காலத்துக்கும் சேத்து வச்ச
கனவு..........

ஏதோ மனச பிசையுது
என்னென்ன சொல்ல தெரியல
அதான் ஒளறுறேன்...
எப்படி ஒட்ட வைப்பேன்
உடைஞ்சி கனவையும்
அதால
உடம்ப பிரிஞ்ச உசிரையும்...

முடியுமுன்னு நினைச்சி
மூச்சு சேத்து கண்ட கனவு
கரைஞ்சி போனா
மூச்சி
முடிஞ்சிதானே போவும்....


காத்துக்கிட்ட இருந்தவங்க
"கவலை படாத"
சொல்ல வந்துட்டாங்க...
என் கனவை காப்பாத்த
கை நீட்டாத இவங்க
தான் "உறவை' காப்பாத்த
நா நீட்டி வந்துட்டாங்க.

ஒரு மனுஷனோட
கனவை கொல்றதும்...
அவனை கொல்றதும்
ஒண்ணுதான்.....
மனுஷனுக்கு இது
எப்ப
புரியும்.....


நான் சொல்றது
கண்ணை மூடி
தூங்கி வர கனவு இல்ல....
கண்ணுக்குள்ள வச்சி மூடி
காத்து வர கனவு...

போற போக்குல
தவறி இடிச்சிடுற மாதிரி..
நாம போற போக்குல
சிலரோட கனவையும்
இடிச்சி தள்ளிட்டு போறோம்...

உயரத்துல இருந்து
விழுந்த தன் கை கொழந்தய
பாத்த பெத்தவள போல..
தான் கனவு விழுறத பாத்தவனும்
தவிக்கிறான்
நாம தான் அதன் கண்டுக்கல.....

எனக்கொரு கனவு இருந்துது
அது இப்போ கனவா போச்சு...
உடைஞ்சி போச்சு
கண்ணாடி போல
கண்ணு முன்னாடியே
உடைஞ்சி போச்சு
காலத்துக்கும் சேத்து வச்ச
என் கனவு..........

எழுதியவர் : சங்கீதா இளவரசன் (25-Aug-16, 3:17 pm)
Tanglish : kanavu kolagal
பார்வை : 123

மேலே