நண்பா நம் வீட்டிற்கு வா -2

நண்பா ! நம் வீட்டிற்கு வா

நீ
எந்த நிலையில் இருந்தாலும்
கை கொடுக்க நாங்கள் இருக்க....
கை எடுக்கும் நாட்டில் வாழ்ந்து
என்ன பயன் கண்டாய்...............

நண்பா,
உனக்கு
நம் நாட்டின் காந்தியை தான் பிடிக்கவில்லை
என்றால்
நம் நாட்டின் காந்தி நோட்டுமா பிடிக்கவில்லை.....?

நம் நாட்டில் அரசனாய் வாழ்வதை விட்டு,
அந்நிய நாட்டில் அடிமையை வாழ்கிறாய்....

தோல் கொடுக்க தோழன்
தோல் மீது சாய தோழி
காதலிக்க காதலி
தெருவெல்லாம் தேவதைகள்
என இங்கு இருக்க
நீயோ
காசுக்கு காதல்
அன்புக்கு அரை மணிநேரம்
என
பிரித்து பார்க்கும் நாட்டில் வாழ்ந்து
என்ன பயன் கண்டாய்...............

நண்பா,
அங்கு அன்பும் அனாதையாக தான் உள்ளது
இங்கு அன்பு உறவோடு உயிரோடு உள்ளது

முடிவில்லாத
அன்பை பருகிட
அழைக்கின்றேன்......
.
நம் நட்பின் மீது வைத்த
காதல் உன்னை அழைக்கின்றது..........

நம் வீட்டிற்கு வா.......

-ஜ.கு.பாலாஜி.

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி (26-Aug-16, 10:14 am)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 160

மேலே