மடியில் மடிக்கணினி ​

தடி ஊன்றும் வயதில்
மடியில் ஓர் கணினி !
கலியுகத்தின் புரட்சியிது
கண்குளிரும் காட்சியிது !

மடியில் வைத்து
மண்ணுலகை காணலாம் !
விழிகளைக் கொண்டு
விண்ணுலகை சுற்றலாம் !

தலைமுறைகள் கண்ட மனிதரும்
விடைபெறும் வயதில் உள்ளோரும்
நடைபயிலும் மழலையும் இன்று
மடிக்கணினி வலையில் விழுந்து
காலத்தைக் கடத்தும் காலமிது !

விஞ்ஞானத்தில் நல்ல வளர்ச்சியே
விண்வெளியில் வாழ முயற்சியே
விவசாயத்தில் கடும் வீழ்ச்சியே
விளைவுகள் தந்திடும் அதிர்ச்சியே
நல்லதே நடந்தால் மகிழ்ச்சியே !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (27-Aug-16, 7:31 am)
பார்வை : 309

மேலே