கண்களால் தொட்ட காதல்
கண்ணே உன் கண்ணால் என் கண்ணைப் பா..ராய்
முன்னே நீ வந்தே என் உள்ளம் கீ..ராய்
பெண்ணே உன் பார்வை எனில் தீ வைக்..குதே
சின்ன என் இதயம் அதில் லயிக்..குதே
பட்டாம் பூச்சிப் பெண்ணே
உன் பார்வை மின்னல் அடிக்குது
காதல் வார்த்தை கோர்த்து
அது புதுப்புது ராகம் வடிக்குது (கண்ணே...)
நானோ இருந்தேன் தீவாய்
கரைவிட்டு தூரம் ஒதுங்கியே
நீயோ வந்தாய் தீயாய்
எனை எரிக்கும் பார்வை பொருந்தியே
கண்ணுக் குள்ளே கலந்தாய்
என்னை உன்னால் அளந்தாய்
முற்றுப் பெறா காதல்தந்து
இதயம் முழுதாய் நுழைந்தாய்.. (பட்டாம்பூச்சி...)
வாழ்வில் இருந்தது வெறுமை
உன்னால் காதல்வந்தது அருமை
கல்லூரி சென்று படிக்காமலே
காதல் பட்டம் பெற்றது பெருமை
உன்னில் நானும் கலந்தேன்
என்னை முழுதாய் உணர்ந்தேன்
சற்றும் சலிக்கா காதல்கிடைக்க
காதல் வாசம் நுகர்ந்தேன்.. (பட்டாம்பூச்சி...)