காதல் சிலநேரம் பலனளிக்காத மருந்தாகுமோ

அவர்களுக்குள்
காதல் தூண்டும் உறவுகள்
காயம் ஆற்றிடும் தீர்வுகள்.

அவளுக்கு
ஒரு முறை பட்ட அடியால்
இரு முறை யோசிக்க வைக்கும்!

அவளுக்காக
அவன் கண்களில் ஏந்திய
காதல் பார்வைகள்!

இருந்தும் ஏனோ
யோசிக்கிறாள்,

அவனுக்கு பிடிக்காமல்
அவள் கண்கள் சிந்தும்
உப்பு வார்த்தைகள்!

மருந்து மரத்துப்போகும்
மனசு வெறுத்துப்போகும்
ஒவ்வாத காதலுக்கு
உதவாத சூழலில்.!

எழுதியவர் : செல்வமணி (27-Aug-16, 7:53 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 192

மேலே