மூக்குத்தி

( பெண்ணின் மூக்குத்தி
காதல் கொண்டு கவி படித்தால் )

அன்பே
என்னால் காயப்பட்டிருந்தால்
மன்னித்துவிடு
யாரையாவது காதலிதுக்கொண்டிருந்தால்
அவனை மறந்துவிடு

கண்ணே
உன் மூக்கின் மீதல்லவா
நான் வசிக்கிறேன்
உன் மூச்சைக்கொண்டல்லவா
நான் சுவாசிக்கிறேன்

என் உயிர்காக்க உயிர்வாழ்
என் உடல் காக்க மறை கொண்டு
இடு தாழ்

உன் வாசம் புதுக்கவியை என்னுள்
கோர்த்து போதிக்கிறது
உன் ஜலதோஷம் என்னையும்
சேர்த்தே பாதிக்கிறது

மெல்லமாய்த் தும்பு
என் இதயம் அதிர்வில் வலிக்கிறது
உன் கை படும்போதெல்லாம்
என் மெய் ஏனோ சிலிர்க்கிறது

உன் மூக்கு புள் என்றால்
நானோ அதில் வெண்பனி
உன் முகத்திற்கு அழகுசெர்ப்பதே
என்பணி

உன் மருதாணி கைபட்டு
என் திருகாணி சுழலும்போதெல்லாம்
என் மறை கழல்கிறது

உறவே
நீ மரணித்த மறுகணம்
என் மரணம்

உயிரே
உன் காதலனைக் கூட கழற்றி விடு
தயவுசெய்து
என்னை கழற்றி விடாதே

இப்படிக்கு
உன்னால் சுவாசிக்கும்
உன்னை நேசிக்கும்
அன்பு மூக்குத்தி

எழுதியவர் : குமார் (27-Aug-16, 6:44 pm)
பார்வை : 1083

மேலே