பெண்ணின் காதல்

எனக்கே தெரியாது
இதயம்பற்றி
நுழைந்தவனே

மணி கணக்கே தெரியாது
எனைச்சுற்றி
விழைந்தவனே

மன்மதனின் மைத்துனனே
மலர் விழிகொண்டு
என்மனதைத் தைத்தவனே

ஆண் அழகனல்ல நீ
ஆனாலும் அழகன்

மெய்யழகனல்ல நீ
மெய்யாகவே அழகன்

மாவீரனல்ல நீ
எனைக்கவர்ந்த
மாநிறம்தான் நீ

பொய்விழி கொண்டு
என் மைவிழி வென்றவனே

மகிழ்மதியின் பாகுபலி வேண்டாம்
என் மதிமகிழ பாசமிடு போதும்

மனதைக் காயம்
செய்வோருக்கு மத்தியில்
என்னிடமில்லாது மாயம் செய்தவன்
என் உயிரினை
இரு கண்கொண்டு கொய்தவன்
பூக்களைக் கொண்டே
சேலையினை நான் உடுத்த நெய்தவன்
காதல் எனும் தீயினை என் மீது எய்தவன்

இந்திரனின் அவதாரமே
இனி நான்தானடா உன் தாரமே

எழுதியவர் : குமார் (27-Aug-16, 6:38 pm)
பார்வை : 364

மேலே