காற்றே தூது போ

காற்றே காற்றே செவி சாய்ப்பாய்
இந்தப் பாவிமனதின் மொழி கேட்பாய்
நேற்றே நேற்றே விழுந்து விட்டேன்
நான் இன்றும் விழுந்திடக் காத்திருக்கேன்
கண்ணில் பட்டது அவன் லீலை
அதில் மயங்கிவிட்டது என் மூளை
விழிக்குள் குடியும் அமர்ந்து விட்டான்
என்னை முழுதாய் குடித்துமுடித்து விட்டான்
சின்னக் காற்றே தூது செல்வாய்
என் செல்லக்காதலை நீயும் சொல்வாய்
அழகுக் காற்றே அருகில் வந்து
என்வாசம் எடுத்தவன் நாசி செல்வாய்
சிலுசிலு காற்றே இதயம் குளிர்ந்திட
குளுகுளு சேதி என்செவி சேர்ப்பாய்
தனிமை நிலவென் வழித்துணை ஆகிட
நிழலாய் அவன்வரும் மொழி சேர்ப்பாய்
காற்றே உன்னை நம்பி இங்குநானே
எனக்காய் தூது போவாய் தானே
காதல்காட்டில் மாட்டிய கவரி மானே
உனக்காய் தூது போவேன் காற்றுநானே