காதலுக்கு ஓய்வா

இன்று ஏன் இந்த மௌனம்

என் காதலியே என்று கேட்டேன்

மௌனத்தில் அவள் அபிநயித்து

ஒன்று தெரிவித்தாள், அது

எனக்கு புரிந்தது, அதுதான்

இது ," இனிப்பே உணவு என்று

உண்டு வந்தால் ,இனிப்பு

அலுப்பு தரும் , அது என்றும்

அமுதாய் இருக்க ,இடையில்

இனிப்பு உண்பதை சிறிது

தவிர்க்கலாமே".

" காதலுக்கும் ஓய்வு தேவை

காதல் புத்துணர்ச்சி பெற"

இது தான் அவள் பாடிய

மௌன ராகம் அபிநயித்து .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (27-Aug-16, 8:26 pm)
பார்வை : 77

சிறந்த கவிதைகள்

மேலே