காதல் தேவதை

சித்திரம் மயங்கும்
உன் பார்வையிலே
நவரத்தினம்
சிதரும் உன் சிரிப்பிலே
அண்ணக்கூட்டம்
ஏங்கும் உன் நடையிலே...
ஆயிரம்
பூ பூக்கும் உன் உடையிலே

வெட்டிவேரு வாசம்
உன் கூந்தலிலே வீசும்
மொட்டு மொட்டு ரோஜா
உனை தொட்டு தொட்டு பேசும்...

உன்மேனி சிவப்பை
செவ்வானம் கேட்கும் அது
நிலவை தூது விட்டு பார்க்கும்....

மொத்த அழகையும் குத்தகை
எடுத்தவளே உன்கரம் பிடிக்க
என் மனம் ஏங்குதடி...

எழுதியவர் : செல்வமுத்து (28-Aug-16, 9:15 am)
Tanglish : kaadhal thevathai
பார்வை : 138

மேலே