பணமரம் முளைத்தால்

பணமரம் முளைத்தால்
பணவிதையே தெய்வமாகும்
உழுவுசெய்யா மனிதனும்
உழுகப் போய்விடுவான்..

மரங்கள் வெட்டப்படாது
மரங்களில் பணம்பறிக்க‌
வைத்தவனுக்கு அனுமதி
ஏறிட்டுபார்த்தாலும் பார்த்தவனுக்கு ஒருமிதி

ஆயிரம் ரூபாய் மரங்கள்
அதிகமாய் காட்சிதரும்
ஆராய்ச்சி அதிகம் நடந்து
லட்ச ரூபாயும் கோடி ரூபாயும் கூட பணமாய் கிடைக்கும்

மழைபெய்தால் பணம் நனையுமென்று
மழையைத் தடைசெய்யவும் வாய்ப்பிருக்கு
பணங்காடாய் ஆகும் பூமி
பிணக்காடாகவும் சீக்கிரம் ஆக வாய்ப்பிருக்கு

வீடுகளில் நடக்கும் கொள்ளை குறையும்
காடுகளில் வேட்டையாடும் கொள்ளை கூட்டம்
பணம் மட்டுமே பயிரிடப்பட்டு
காய்கறிகள் பயிரிடப்படுவது முற்றிலும் நிறுத்தப்படும்

நாளாக நாளாக பணத்தையே உணவாக்குவான்
உடல் நோய் வாய்ப்படும்
மன நோய் உலகை பிடித்தாட்டும்
உலகம் சீக்கிரம் சொர்க்கம் அடையும்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (28-Aug-16, 10:47 am)
பார்வை : 108

மேலே