தத்துவங்கள்-04

1.ஊர் குரல் ஓங்கினால் உண்மையின் தனிக்குரல் மெளனமாகிடும்.

2.குழந்தை-கண்ணாடியைப் போன்றவர்கள் உலக முக பாவனைகள் எப்படியோ அப்படியே அவர்களின் முக பாவனையும்.

3.வெண்ணிலா இல்லா வானமும் பெண் இல்லா வாசலும் ஒன்றே.

4.நீதிக்குப் புறம்பான செயலுக்கு ஊமையனைச் சாட்சியாக அழைக்கும் அறிவாளியே அதிகம் இங்கு.

5.ஊர் சொல்லுக்கு அஞ்சி எவன் தன் மனதின் எல்லையைச் சுருக்குகிறானோ அங்கேயே அவன் தோல்வி ஆரம்பமாகிறது.

6.சீறிப் பாய்ந்தாலும் ஓடை நீர் கடல் செறாது அதுபோல் முகம் பார்த்து பேசாதவனிடம் முழுமையும் சொல்லாதே.

7.நீ யார் என்பதை அறிய ஜோசியம் பார்க்க வேண்டாம்-உன் மனசாட்சியை விட நேர்மையானவன் யாரும் இங்கு இல்லை பொறுமையாக அதனுடன் பேசு தெளிவு பிறக்கும்.

8.தனக்கேன ஒரு கோட்பாட்டையும், ஒரு வரையறை வகுத்து அவற்றைத் தானே மீறுவோன்-அறிவாளி முட்டாள்.

9.நேர்மைக்குச் சிறந்த உதாரணம் அவனவன் நிழலே தானே எந்தத் தவற்றையும் செய்யாது.

10.அணையும் வரை எறியும் தீபம் காண அழகு, மங்கை அழகியாய் இருந்தாலும் புண்ணைகைக்கும் முகமே காண அழகு.

11.இராத்திரி வறுமை-தனிமையில் சுவரை பார்த்து ரகசியம் பேசுபவள் மட்டுமே அறிவாள்.

12.வாழ்க்கை பயணம்-இன்று உன் தாத்தா நாளை உன் அப்பா மறுநாள் நீ இதில் ஊர் போற்றலும்,தூற்றலும் என்பது அவரவர் செய்கையே.

13.கண் பார்த்து பேசா மனிதனின் பார்வை கழுகு பார்வையை விடக் கொடூரம்.

14.உண்மைக்கும்,பொய்மைக்கும் ஒருவனே சாட்சி-நீதி.
-அ.பெரியண்ணன்

எழுதியவர் : அ.பெரியண்ணன் (28-Aug-16, 11:53 am)
பார்வை : 163

மேலே