மனிதனுக்கு நிழலுண்டு

ஆகாயத்தில் அமைதியாக பறந்து செல்லும் பறவையை போன்று நானும் பூமியில் வாழவேண்டும் என்ற எண்ணம் பலரின் நோக்கமாகும். ஆனால் இறைவனின் நோக்கம் மனிதனின் நாட்டம்.
துயரம் எனும் ஆழ்ந்த தூக்கத்தில் உறங்கிக் கிடக்கும் ஒரு சில மனிதர்களது உணர்வுகளை அறியாத சகமனிதர்கள் அவர்கள் மீது பொய்யான வதந்திகளை பரப்பி விடுகின்றனர்.
மனிதனுக்கு நிழலுண்டு, உறவுக்கு நிஜமுண்டு, நிலாவிற்கு வெளிச்சமுண்டு என்று வசைப்பாடும் மனிதர்களே ! இவையனைத்தும் வெறும் அற்பத்தைத் தவிர வேறோண்டுமில்லை என்பதை மறந்து விடாதீர்கள்.
ஆதிகாலம் நீதி கேட்கும் மனிதனை கொள்ளும் சகமனிதன் ஆனால் இன்று நவீன காலம் சற்று வித்தியாசமாக நீதி கேட்கும் மனிதனை அகிம்சை வழியில் கொலை செய்யும் சகமனித கூட்டம்.
நீண்டதூர பயணம் தனிமையில் சென்ற தருணம் வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பம், வெருண்டோடிய இன்பம், இருளில் உட்கார்ந்து, வெளிச்சத்தை எதிர்பார்த்த மனிதர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன்.