மனிதனின் மார்க்கமயக்கம்
மனிதனின் மது மயக்கமானது விடித்ததும் தெளிந்து விடுகிறது
மனிதனின் மார்க்கமயக்கமானது என்றுதான் விடித்தது தெளியுமோ
மனிதனை ஒன்றினைய்க்க வேண்டுமென்று ஒரு காலத்தில் மார்க்கம் என்ற ஒன்றை மனதில் விதைத்தனர்
விதை மரமானது
மரம் பெருவிருட்சமானது
மதமெனும் மரத்தின் நிழலில் மக்கள் என்ன கனிகளை உண்டனர்
அதன் விதை எடுத்து ஆளுக்கு ஆளொரு மரத்தை வளர்த்து அது வேறு
இது வேறு என்று வாதிட்டு கொண்டனர் .
இன்றோ ஆளுக்கு ஆளொரு வேடமிட்டுக்கொண்டு மதமெனும் புதைக்குழி மேடையில் ஆட்டம் போடுகின்றனர்
பள்ளிக்கு செல்லும் பிள்ளையிக்கு சாதி என்ற சந்திட்டு மகிழ்கின்றனர்
விதைத்த நம்மையே விழுங்க நீனைப்பதா
வேலிக்கு வளர்த்த வேலம் மரத்தையே விவசாயம் செய்வதா
சுல்லிக்கு உதவும் என்று சுதி பாடும் ஆதிக்கனெ
சுகமாக நீ வாழ்வதகா என்னி சூனியம் வைத்துக்கொள்கிறாய்
நாமே இவுலகிற்கு காவலாகி பொனபின் நமக்கு எதற்கு ஒரு காவல்