ந ஜானகிராமன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ந ஜானகிராமன் |
இடம் | : புதுச்சேரி |
பிறந்த தேதி | : 10-May-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Aug-2016 |
பார்த்தவர்கள் | : 71 |
புள்ளி | : 7 |
விழும்புகளில்லா சிறு விதையென-
விழுந்தேன் இந்த பூமியில்
அதனார்தம் புரியும்முன்னரே -
ஆற்றில் வீசிவிட்டனர் என்னை ஈன்றோர்
கையருகே கரையிருந்தும் பற்றமுடியாது -
கடந்துசென்றேன்
சூழலையே சுள்ளிகளாக பற்றிக்கொண்டு -
சுடுகாட்டின் பக்கம் ஒதுங்கினேன் .
ந.ஜானகிராமன்
என் வானிலை மாறுதே.....
தவிக்கின்ற என் பெண்மையில்
குளிருது என் வானிலை.....
என் தேடல்கள் உன் பார்வையில்...
வான்மழை என் பூமியில்
நடுங்குது உன் தீண்டலில்
என் சுவாசங்கள் உன் மூச்சினில்...
உன் மடி சாய ஓடோடி வந்தேன்..
உன் முத்தத்தில் எனை மறந்தே நின்றேன்...
மயங்கிறேனே.....கரைகிறேனே....
என் மடி மீது உன் முடி சேர்ந்ததால்...
திளைக்கிறேனே....அணைக்கிறேனே...
என் தாபங்கள் உனை சேர்வதா....
(தவிக்கின்ற என் பெண்மையில்......)
இனிவரும் நொடியெல்லாம் உனக்குள்ளே
புதைவேனே...
உன் நிழலோடு கரம் கோர்த்து தான்....
பூ மலர்கின்றதே...அதரங்கள் துடிக்கின்றதே....
உன் நெஞ்சோடு நான் மூழ்கவா.....
ஒவொரு நாளும் கதிரவனோடு கண்விழித்திட
வேண்டும் .
ஆழ்கடல்போல் அமைதியாயிருக்க
வேண்டும் .
அலைகளை போல் ஒன்றின் பின் ஒன்றாக முயற்சிகளெடுத்திட
வேண்டும் .
எண்ணங்களில் வண்ண வண்ண மீன்களாய் நீந்திட
வேண்டும் .
காதலெனும் கள்ள தோணியில்யேறி தொலைந்திட
வேண்டும்.
அனுபவம் எனும் ஆற்றை கடந்து ஆழ்கடலென இருக்கும் அறிவை பெற்றிட
வேண்டும்.
கனவுகளேனும் கப்பலேறி கரையினை கடந்திட
வேண்டும்.
ந ஜானகிராமன்.
ஒவொரு நாளும் கதிரவனோடு கண்விழித்திட
வேண்டும் .
ஆழ்கடல்போல் அமைதியாயிருக்க
வேண்டும் .
அலைகளை போல் ஒன்றின் பின் ஒன்றாக முயற்சிகளெடுத்திட
வேண்டும் .
எண்ணங்களில் வண்ண வண்ண மீன்களாய் நீந்திட
வேண்டும் .
காதலெனும் கள்ள தோணியில்யேறி தொலைந்திட
வேண்டும்.
அனுபவம் எனும் ஆற்றை கடந்து ஆழ்கடலென இருக்கும் அறிவை பெற்றிட
வேண்டும்.
கனவுகளேனும் கப்பலேறி கரையினை கடந்திட
வேண்டும்.
ந ஜானகிராமன்.
கண்ணீரில் கரைந்த நட்பு
தாயின்றி தவித்தவளுக்கு தாய்மடி நீயும் தந்தாயடி
தந்தையை இழந்து நின்றவளுக்கு தோள் கொடுக்கும்
தோழியாய் நீயும் நின்றாயடி
தவமின்றி என் வாழ்வில் நீயும் கிடைத்தாயடி
எனை தாங்கும் வரமாய் நீயும் இருந்தாயடி....
துவண்டு போய் கிடந்தவளை அன்பு எனும்
அஸ்திரத்தால் தலை நிமிர்ந்து நிற்கவே செய்தாயடி
வலிகள் நிறைந்த என் வாழ்க்கையிலே
என் வழிகள் மறந்தே நானும் நிற்கையிலே
புது பாதை எனக்காய் அமைத்தே கொடுத்தாயடி...
கவலைகளால் என் கண்ணீர் கரைகையிலே
அள்ளி அணைத்தே என் விழி வெள்ளத்திற்கு
அணையாய் நீயே நின்றாயடி
திசை மாறிய என் வாழ்க்கை பக்கங்களுக்கே
திசையமைத்தே நீயும் தந்தாயடி..
நண்பன் காதலிக்கு மருந்து வாங்க நானும் சென்றேன் மருந்து கடைக்கு
நாங்கள் சென்றதோ செந்தாமரை குலத்திற்கு
ஆம் மருந்து கடையில் எப்படி மலர் இருக்க முடியும்?
அவள் கண்களை பார்க்க பார்க்க கால்சியம் போட்டதுபோல் இருக்கு
அவள் உதடுகள் பேச பேச குளூக்கோஸ் ஏறுகிறது
அவள்விட்ட மூச்சி காற்றை உள்ளிழுத்தேன் போதை மாத்திரை போட்டதுபோல் இருக்கு
மருந்து கடையில் மல்லிகை வாசம்
கண்கள் சொக்கி காது அடைத்து
மனம் மயங்கி கேட்டேன் மல்லிகை பூ என்ன விலை?
என்னை மறந்ததேன்
காதலனே என்னுயிர் மன்னவனே
என் காதலை மறந்தே நீயும் சென்றதேனடா..
ஆதவனும் மறையும் முன்னே
என் உள்ளமதை நீயும் உடைத்ததேனடா..
உன் விழி அம்பாலே என் மனதை
நீயும் பறித்தாயடா...
இன்று உன் சொல் அம்பாலே
என் பூ இதயம் நீயும் துளைத்தாயடா...
என் கவிமொழியும் எனக்கு
ஆறுதல் தரவில்லையடா..
என் தாய்மடியும் இன்று ஏனோ
சுகம் தரவில்லையடா..
என் மூளைக்கும் மனதிற்கும்
நடுவினில் நடந்திடும் போரினிலே
உன் வருகைக்காய் என் மனமும்
இங்கே காத்துக்கிடக்குதடா....
உனை பிரிந்த அந் நொடியில்
என் சுவாசமதை நானும் இழந்தேனடா
எனை மறந்தே தினமும் உனையே
நானும் நினைத்தேனடா
எனை மறந்தே நீயும் சென்றதே
நண்பன் காதலிக்கு மருந்து வாங்க நானும் சென்றேன் மருந்து கடைக்கு
நாங்கள் சென்றதோ செந்தாமரை குலத்திற்கு
ஆம் மருந்து கடையில் எப்படி மலர் இருக்க முடியும்?
அவள் கண்களை பார்க்க பார்க்க கால்சியம் போட்டதுபோல் இருக்கு
அவள் உதடுகள் பேச பேச குளூக்கோஸ் ஏறுகிறது
அவள்விட்ட மூச்சி காற்றை உள்ளிழுத்தேன் போதை மாத்திரை போட்டதுபோல் இருக்கு
மருந்து கடையில் மல்லிகை வாசம்
கண்கள் சொக்கி காது அடைத்து
மனம் மயங்கி கேட்டேன் மல்லிகை பூ என்ன விலை?
முத்துக்கள்
சிப்பிக்குள்
பிறக்கும்
வியந்து
போனேன்
அவள்
முகத்தில் பிறக்கும்
அதிசயம் கண்டு .....
அவள் முக வியர்வை துளிகள் ....
அப்பா
மூன்றெழுத்தில் முகவரி
உறவுகளின் உள்ளடக்கம்
ஆண்டவனின் ஆத்மா
பேரன்பின் பெயர்சொல்
உன் விந்தில் விதையாகி பிறந்தவன் நான்
உன் வியர்வையில் விருட்ஷமாய் வளர்ந்து நிற்கிறேன்
காலத்தின் காட்சியமைப்பில்
சில தருணங்களில்
முட்களின் இடையே முயல்குட்டியாய்
கற்களின் நடுவே கண்ணாடிதொட்டியாய்
நான் பரிதவித்தேன்
முற்களும் கற்களும்
என்னை கீறியிதாயில்லை
திரும்பி பார்க்கிறேன்
தழும்புகளோடு தகப்பன்
என்னை நேசிப்பதில்
என்னைவிட சுயநலவாதி அப்பா
ஒருவனுக்கும் அடங்காத
என் திமிரு -உன்
ஒத்த பார்வைக்கு
ஒடுங்கி போகுமப்பா
உன் பார்வைகளே சொல்லிவிடும்
என் திமிருக்கும் தகப்பன் நீதானு
திசை மாறி தீவி
வளர்பிறையில் பிறந்தவளோ
அவளழகு கூடிக்கொண்டே போகிறது
அவள் அழகை ரசிக்க என் இமைகள்
விழித்த நிலையில் வேலைநிறுத்தம்
செய்கிறது
என் இதயத்தை துளையிடத்தான்
அவள் விழிகள் கூர் தீட்டி நிற்கிறது
அழகென்ற வார்த்தையை
கண்ணாடியில் காட்டிட
அவள் முகமே பிரதிபலிக்குது
மலரென்று நினைத்து அவள் முகத்தில் தேனெடுக்க தினம்
வண்ணத்துப் பூச்சி வருகின்றது
வாடிப்போகவே மாட்டோம் அவள் கூந்தலில் இடம் கிடைத்தால் என்று
பூக்கள் சொல்கின்றது
அவள் பாதம் சூடேரினால் பட்ட மரமும் துளிர்த்து நிழல் கொடுக்குது
அந்த இயற்கை அவளிடம் தன்
காதலை சமர்பிக்குது
அவள் அழகாய் பிறந்துவிட்டாள்
மிக அழகாய் பிறந்துவிட்டாள்
பௌர்ணவமியில் பார்க்கக்கூடும் முழுநிலவை என்று எண்ணியிருந்தேன்
பகல்பொழுதில் என் பக்கத்து வீட்டில் வந்து உலவுவதை கண்டு வியந்தேன்
அவள் வீட்டு ஜன்னல் திறக்கும்பொது மட்டும் பட்டாம்பூச்சிகள்
அது சரி அவள் இதழில் தேனெடுக்க வந்திருக்கும்
உன் வாசல்வழி செல்லும்போதெல்லாம் உன் சைகை எனக்கு ஜாடை சொல்வதாய் என்னுகிறேன்
நீ வருவாய் என கோவில் வாசலில் சிலையாய் நின்றுருந்தேன் உன்னை தரிசிக்க
சிரித்துக்கொண்டே சின்ன பார்வை பார்த்து செல்கிறாய்
பரவசம் அடைந்தே பறப்பதாய் உணர்கிரேன்
ஆயிரம் ஆயிரம் திட்டங்கள் போட்டேன் என் ஆசையை கூற
அனைத்தையும் முறியடித்து விட்டாய் அந்த பார்வையில்