என் வானிலை மாறுதே
என் வானிலை மாறுதே.....
தவிக்கின்ற என் பெண்மையில்
குளிருது என் வானிலை.....
என் தேடல்கள் உன் பார்வையில்...
வான்மழை என் பூமியில்
நடுங்குது உன் தீண்டலில்
என் சுவாசங்கள் உன் மூச்சினில்...
உன் மடி சாய ஓடோடி வந்தேன்..
உன் முத்தத்தில் எனை மறந்தே நின்றேன்...
மயங்கிறேனே.....கரைகிறேனே....
என் மடி மீது உன் முடி சேர்ந்ததால்...
திளைக்கிறேனே....அணைக்கிறேனே...
என் தாபங்கள் உனை சேர்வதா....
(தவிக்கின்ற என் பெண்மையில்......)
இனிவரும் நொடியெல்லாம் உனக்குள்ளே
புதைவேனே...
உன் நிழலோடு கரம் கோர்த்து தான்....
பூ மலர்கின்றதே...அதரங்கள் துடிக்கின்றதே....
உன் நெஞ்சோடு நான் மூழ்கவா.....
மயங்கிறேனே.....கரைகிறேனே....
என் மடி மீது உன் முடி சேர்ந்ததால்...
திளைக்கிறேனே....அணைக்கிறேனே...
என் தாபங்கள் உனை சேர்வதா....
(தவிக்கின்ற என் பெண்மையில்......)
நிமிடங்கள் நகர்ந்தாலுமே...
உன் நினைவுகள் கரையாதே...
என் அகமெங்கும் உன் வாசம் தான்....
எனை மறந்தாலுமே....உனை மறவேனடா...
என் உயிரெங்கும் உன் மூச்சு தான்...
என் வழியெல்லாம் தடம்மாறுதே...
உன் நடையோடு துணையாகுதே...
இனி என் வாழ்வு உன்னோடு தான்...
தொலைகிறேனே...மறைகிறேனே....
உன் விழியோடு விழி சேர்ந்ததால்...
சிலிர்க்கிறேனே...நனைகிறேனே...
உன் உறவோடு உயிராகத்தான்....
(தவிக்கின்ற என் பெண்மையில்......)
குறும்படம் ஒன்றில் இடம்பெற்ற பாடல் மெட்டில் என் வரிகள்.........