நினைவே என் நினைவே
நினைவே என் நினைவே
ஏதோ நடக்கிறது ....
அடியே உந்தன் முகம்
கண்முண் வருகிறது ....
ஒரு கணம் ஒரு கணம்
எனை விட்டு விலகாதே ....
என் கண்ணில் நீ இருந்தால்
கண்ணீர் வடியாதே ....
உன் முன்னே தானடி
என் காதல் பூத்தது .....
நீ இன்றி என் வாழ்க்கை
மண்ணாகி போகுமே....
அம்மண்ணில் நாளை
ரோஜாக்கள் பூக்குமே ....
இதற்குமுன் இப்படி
நான் நினைத்ததில்லையே....
உனை கண்ட பின்பு தான்
ஏதேதோ தோன்றுதே ....
உனை பார்த்து
எனை மறக்கும் வரத்தை நீ கொடுத்தாய் ....
உன்னுடன் நான் வாழும்
கணத்தை ஏன் அழித்தாய் ....
நினைவே என் நினைவே
உயிரினில் கலந்துவிடு ....
எங்கே சென்றாலும்
என்னுடன் வாழ்ந்து விடு ...
இப்பிறவி பயனும் தீருமடி
நீ இல்லா மறுபிறவி வேண்டாமடி ..
ஒரு பார்வை பார்த்து
மோட்சம் நீயும் கொடுத்து விடு ....
மறு பார்வை அதிலே
என் உயிரையும் எடுத்துவிடு ...