எங்கே தொலைந்தோமோ அங்கேயே
எங்கே தொலைந்தோமோ
அங்கேயே
இன்னும் நினைவுகளாய்
நாம் சேர்கிறோம்.....!!
உன் மீது
நான்கொண்ட மோகம்
என்மீது
நீகொண்ட கோபம்
இதுநாள் வரையில்
என்வாழ்வில்
நீங்காத
சோகமாய்......என்னுள்
வாழுது.....!!
காலகாலமாய்
காதல்
என்னுள்
வாழும்.....காயம்
தந்தவளும்
என்னுள் மாயம்
செய்தவளும்
என்றென்றும்
நீமட்டும்
தானென்பேன்......!!
தீராத
சோகம்
தீயாக
வாட்டுது.....
தினம் தினம்
உன்முகம் தானே
தரிசனம்....ஆகிறது
உயிரில்
கலந்தவள் என்றெண்ணி
வாழ்ந்ததால்
தானா.....என்
ஆயுள் தினமும்
பறிக்கிறாய்.....?????
கோபத்தில்
சாதிக்கும்
குறும்புக்கார
குழந்தை போல.....
கோபித்துக்
கொள்கிறேன்......
நீ தந்த
நேசம்
பாசம்
மறுபடி
கிடைத்திடுமென்றெண்ணி......!!!
விட்டுச்
சென்ற
நாள் முதலாய்
விடுபட்டுப்
போன சந்தோஷங்களால்
போலியான
புன்னகையில்
மேலும் மேலும்
பலியாகும்
என்னுயிர்......!!!