அவள் அழகாய் பிறந்துவிட்டாள்

வளர்பிறையில் பிறந்தவளோ
அவளழகு கூடிக்கொண்டே போகிறது

அவள் அழகை ரசிக்க என் இமைகள்
விழித்த நிலையில் வேலைநிறுத்தம்
செய்கிறது

என் இதயத்தை துளையிடத்தான்
அவள் விழிகள் கூர் தீட்டி நிற்கிறது

அழகென்ற வார்த்தையை
கண்ணாடியில் காட்டிட
அவள் முகமே பிரதிபலிக்குது

மலரென்று நினைத்து அவள் முகத்தில் தேனெடுக்க தினம்
வண்ணத்துப் பூச்சி வருகின்றது

வாடிப்போகவே மாட்டோம் அவள் கூந்தலில் இடம் கிடைத்தால் என்று
பூக்கள் சொல்கின்றது

அவள் பாதம் சூடேரினால் பட்ட மரமும் துளிர்த்து நிழல் கொடுக்குது

அந்த இயற்கை அவளிடம் தன்
காதலை சமர்பிக்குது

அவள் அழகாய் பிறந்துவிட்டாள்
மிக அழகாய் பிறந்துவிட்டாள்

எழுதியவர் : கிருபாகரன் (1-Sep-16, 4:19 am)
பார்வை : 390

மேலே