ஆழியும் - ஆசாமியும்

ஒவொரு நாளும் கதிரவனோடு கண்விழித்திட
வேண்டும் .

ஆழ்கடல்போல் அமைதியாயிருக்க
வேண்டும் .

அலைகளை போல் ஒன்றின் பின் ஒன்றாக முயற்சிகளெடுத்திட
வேண்டும் .

எண்ணங்களில் வண்ண வண்ண மீன்களாய் நீந்திட
வேண்டும் .

காதலெனும் கள்ள தோணியில்யேறி தொலைந்திட
வேண்டும்.

அனுபவம் எனும் ஆற்றை கடந்து ஆழ்கடலென இருக்கும் அறிவை பெற்றிட
வேண்டும்.

கனவுகளேனும் கப்பலேறி கரையினை கடந்திட
வேண்டும்.

ந ஜானகிராமன்.

எழுதியவர் : ந ஜானகிராமன். (26-Sep-16, 9:12 pm)
சேர்த்தது : ந ஜானகிராமன்
பார்வை : 70

மேலே