கண்ணீர் துளியில் நனைந்த பக்கங்கள்-பக்கம்-01

கண்ணீர் துளியில் நனைந்த பக்கங்கள்-பக்கம்-01
தினமும் விடியலை
தருகிறான் பகலவன்
என் வாழ்வு மட்டும்
ஏனோ
விடியலை காணாத
இருட்டறையினுள்ளே..
விடியாத என் இரவுகளை
தேடுகிறேன் நானும்
முடிவில்லாது தொடரும்
என் கனவுகளில்....
காலங்கள் கடந்தும்
காயங்கள் ஆறவில்லை
காலம் முழுதிலும்
என் மனதில் அவை
ஆறாத ரணங்களாய்....
உதட்டோரமாய்
சிறு புன்னகையுடன்
உலாவருகிறேன்
மனதோரமாய்
மறக்க முடியா
வலிகளை நானும்
சுமந்தபடி.....
நிஜத்தில் தொலைத்த
என்னை நிழலில்
தேடி அலைகிறேன்
அதிலாவது
என் தேடலுக்கான
விடை கிடைக்காதா
என்ற நிராசையில்....
விடியாத
என் வாழ்க்கை
பக்கங்களை நானும்
கண்ணீரால் நனைத்தே
தொடருகிறேன்....
என் வாழ்வின் அர்த்தம்
அடைந்திடவே.....!!