ஒரு போராளியின் காதலும் கண்ணீரும் கலந்த சரித்திரம்.... பாகம் -06

விடுதலை போராளிகள் அனைத்து சிறுவர்களுடன் அன்பாகவே கதைத்தார்கள். அமைதியான சூழல் என்பதால் அச்சூழல் அனைவரதும் மனதிற்கு அமைதியைக் கொடுத்தது. பனை ஓலைகளால் வேயப்பட்ட கொட்டில்கள் நிறைய காணப்பட்டன.பெரிய மாமரங்கள் இரண்டு முற்றத்தில் காணப்பட்டன.

அவ் மாமரங்களுக்கு கீழே அனைவரையும் அமர்த்தி முதலில் அனைவருடனும் கதைத்தனர். பின்னர் உணவுகள் பரிமாறினார்கள் அவ் போராளி வீராங்கனைகள். ஆனால் அவர்கள் அனைவரும் சாதாரணமாகவே உடைகள் அணிந்து இருந்தனர்.

நிறைந்த வாசனை மிகுந்த சுவையான உணவு. வினோ இன்று தான் இப்படியான சுவையான உணவை கண்டாள். ஆனால் அவளால் அவ்வுணவை சுவைத்துச் சாப்பிட முடியவில்லை.

வினோவுக்கு தன் தங்கை ஞாபகம் தான் வந்தது. அவள் வீட்டில் தினமும் தன் அத்தை கொடுக்கும் பழைய சோற்றை தான் உண்பாள்.ஆனால் அது கொஞ்சமாக இருப்பதால் தங்கை பசியுடன் இருக்க கூடாது என்று அவள் சிறிது உண்டு விட்டு மீதியை தன் தங்கைக்கே ஊட்டிவிடுவாள்.

ஆனால் இன்று தனிமையில் இருந்து சுவையான உணவை உண்ண மனமில்லாமல் அப்படியே இருந்தாள். வினோவைத் தவிர மற்ற சிறுவர்கள் அனைவரும் வேகமாக உணவை உண்டு விட்டு வரிசையாக அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தனர்.
"அனைவரும் உணவை உண்டு விட்டு வாருங்கள் வாகனம் புறப்பட்ப்போகிறது......"
என்று சத்தமாக கூறப்பட்டது. வினோவும் அமைதியாக வாகனத்திற்குள் சென்று அமர்ந்தாள். இப்படியே தொடர்ந்து மூன்று நாட்கள் அப் பயணம் தொடர்ந்தது.

. முன்றாவது நாள் மாலை ஆறு மணியிருக்கும். வாகனம் வேகமாக ஒரு விடுதிக்குள் சென்றது. இவ்விடுதி வாசலிலே "செந்தழிர் இல்லம்,கிளிநொச்சி"
என்று போடப்பட்டிருந்தது. அப்போது தான் வினோவுக்கு புரிந்தது.தான் தன் ஊரிலிருந்து வெகுதூரத்தில் இருக்கிறேன் என்று.

அனைவரும் உள்ளே சென்றனர். "கை,கால் முகம் கழுவி விட்டு வாருங்கள்..." என்று கட்டளை இடப்பட்டது........
தொடரும்..............

எழுதியவர் : சி.பிருந்தா (29-Aug-16, 12:18 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 197

மேலே