தேவதை என் வீட்டு பக்கத்தில்
தென்றலை சுவாசிக்கலாம் என்று
தெருவிற்கு வந்தேன் அங்கு
ஐந்தடி அளவில் தேவதை ஒன்று
நிற்பதை கண்டு திகைத்து
நின்றேன்
அவளின் அழகினை சொல்ல
வார்த்தை இன்றி வர்ணிக்க
தொடங்கி விட்டேன்
இப்படி ,
அவளின் மென்மையான கூந்தலில்
மேகமாக கலந்தேன்
ஆணை மழக்கும்
அவளின் கரு விழிகளை கண்டு
வியந்து போனேன்
அவள் சுவாசிக்க வேண்டுமென்று
அவளை தென்றலாய் தேடி வந்தேன்
அவள் சிரிப்பில் சிதறிப்போனேன்
அவள் இதழில் என் இதயத்தை
தொலைத்தேன்
அவள் பூங்குழல் கழுத்தில்
புது கவிதையை கண்டேன்
அவள் நடையின் நளினத்தால் உண்டான
மன்மத மழையில் நனைந்து போனேன்
அவள் பூப்பாதம் பதிந்த இடங்களில்
பூவாக பதிந்தேன்
நிழல் கூட அழகாக இருக்கும் என்று அவள்
நிழலை கண்டு வியந்தேன்