ஓர் இரவு - அவளும் நானும்

இரவில்

நீ
நட்சத்திரங்களை
எண்ணிக்கொண்டிருக்கிறாய்,

நான்
உன்னையே
எண்ணிக்கொண்டிருக்கிறேன்!

நீ
நிலவின் குளிரில்
நனைந்து கொண்டிருக்கிறாய்,

நான்
நிலவே உன்னை
நினைத்துக் கொண்டிருக்கிறேன்!

நீ
தலையனை அனைத்து
உறங்குகிறாய்,

நான்
தலைவியை நினைத்து
உறக்கமிழக்கிறேன்!

நீ
அழகிய கனவுகள்
கண்டு மகிழ்கிறாய்,

நான்
அழகியே உனை
காண தவிக்கிறேன்!

மொத்தத்தில் இரவு
உன்னை
தாலாட்டுகிறது,

என்னை தவிக்க விடுகிறது!

எழுதியவர் : லி.முஹம்மது அலி (29-Aug-16, 2:05 pm)
பார்வை : 139

மேலே