நிலவு
பகலினில் உலவும்
நிலவே நீ...
உன்னை கண்டால் நிலவு
கூட மயங்கும் உன்
அழகினில்...
பகலினில் நிலவு வராத
காரணம் நீயிருப்பதால் தானோ...
உனை படைத்த பிரம்மன்
கூட பெருமை கொண்டானே...
சிறந்த படைப்பான உனை
படைத்ததாலே!
ஆதவனுக்கும் தன் ஒளியால்
உனை சுட்டெரிக்க மனமில்லாமல்
மழை பொழிய செய்தானோ!
உன் மெல்லிய இடை
கொண்ட மேனியை கட்டி
அணைக்கும் பங்களிப்பு
மழைக்கு தந்தானே!