விரும்பியது நீ அல்ல

உன்னைக் கடந்து செல்லும்
ஒவ்வொரு வேளையும்
உன்னைக் கண்டேன்...
என் விழி,
உன் விழியோடு மோதும்
ஒவ்வொரு நிமிடமும்
நிசப்த நிமிடங்கள்.
மனதில் ஏதோ ஓர் மாற்றம்
உன்னைப் போலவே எனக்கும்..
என்னைக் காண்பதற்காக
நீ காத்திருப்பதை நான் விரும்பவில்லை.
"குறித்த நேரத்தில்
தவறாது செல்ல வேண்டும்."
என் தந்தையின் வாக்கு அன்று வேதவாக்கானது.
நிறைவேற்றினேன் உனக்காக.
நான் உன்னைக் காண்பதையும்
நீ என்னைக் காண்பதையும்
பிறர் கண்டுவிடக்கூடாது என்பதில்
உறுதியாய் இருந்தாயோ என்னவோ???
நான், உன்னைக் காணும்போதெல்லாம்
நீ என்னைக் கண்டுக்கொள்ளாமல் இருந்தாய்.
உன் மனதின் ஓட்டத்தை
உன் காத்திருப்பில் இருந்து புரிந்துகொண்டேன்.
ஆறு திங்கள் ஆனது...
உன்னைக் காணவில்லை...
தேடினேன்..
உன்னைத் தேடும் போராட்டத்தில்
என் கண்கள் தோல்வியுற்று நின்றன.
என் மனதை சிறைக்கைதி ஆக்கினாய்.
தவறிழைத்தேன்.
நீ என்னை விரும்புகிறாய் என்று..
விரும்பியது நீ அல்ல
"நான்"

எழுதியவர் : மு.முருகேஸ் (29-Aug-16, 4:31 pm)
பார்வை : 280

மேலே