கொஞ்சம் கவனமாகவே இருங்கள் அவர்களிடம்
அவர்கள்
வேப்பிலை சாட்டையடிகளுக்கு பயப்படுவதில்லை
மசூதி தர்ஹாகளில் அடிபணிவதில்லை
தேவாலய சங்கிலிகளுக்கு கட்டுப்படுவதில்லை
திருநீர் கண்டோ
தீர்த்தம் கண்டோ
சிலுவைக் கண்டோ
பயப்படாத அவர்களிடம்
கொஞ்சம் கவனமாகவே இருங்கள்
ஆமாம்..
அவர்களை பிடித்திருப்பது
"சாதி மதப் பேய்"