பெண்கள் எதற்கும் துணிந்தவர்கள்தான்

பெண் என்றாலே அழகுதான்
மிகுந்த அழுகு இருந்தால்
திமிர் இருக்குதான்...!

வீட்டில் முடங்கி கிடந்த பெண்கள்
படித்தறிந்து படிதாண்டி சென்றதால்...
பல துறைகளில் சாதித்து வருவதால்...
செருக்கு கொஞ்சம் இருக்கத்தானே செய்யும்...!

சில ஆண்கள் செய்யும் அட்டுழியத்தை அடக்க
ஒரு சில நேரங்களில் அகங்காரம் கொள்வது இயல்புதான்..!
ஆணுக்கு பெண் சளைத்தவர்கள் அல்ல என்பதை
நிருபிக்க அகங்காரத்தோடு எழுந்தருளாதிருந்தால்
பத்திரகாளியாக எப்படி முடியும்?

பொறாமை குணம் என்பது பெண்களுக்கும் உரியதுதானே
அது இன்று கொஞ்சம் அதிகரித்துள்ளது
சுயநலம் மிக்க சமூகத்தில் வாழ்வதால்....
நனா? நீயா? என்ற போட்டிக்குள் இருக்கும் போது
அது இல்லையென்றால் ஜெயித்து வாழ்வதெப்படி?

வெளியில் வந்து உலகத்தை அறிந்ததினாலும்...
உலகம் இன்று கைக்குள் அடங்கிவிட்டதாலும்....
எல்லாம் எனக்கு தெரியும் என்ற எண்ணம் வளர்ந்து விட்டதாலும்
பெண்கள் இன்று எதற்கும் துணிந்து விட்டனர் போலும்...!

எழுதியவர் : கிச்சாபாரதி (29-Aug-16, 9:51 pm)
பார்வை : 147

மேலே