நல்லதும் கெட்டதும்

எதை செய்தாலும்
நல்லதோ கெட்டதோ
அதைப்பற்றி
மோசமாகத்தான்
பேசுவார்கள்,

கண், காது, மூக்கு - எல்லாம்
நல்லது கெட்டது என்பதை
சாதாரணமாகவே
எடுத்துக்கொள்ளும்,
வாய் மட்டுமென்ன
வாய்தாவா வாங்கும்?

நல்லது நடக்காமல் போனால்
அது தான் தெரிஞ்சதாச்சே
என அலட்டிக்கொள்ளும்.
ஒரு வேளை நல்லதே நடந்து விட்டால்
அட, பரவாயில்லையே
என அலுத்துக்கொள்ளும்.

அது சரி ஏன் இப்படி என்று
எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன்?
நாம் எப்போது அப்படி இருந்தோம்
இப்போது மட்டும் மாறி இருப்பதற்கு,
என எகத்தாளம் தான் பதிலானது.

மனுஷப்பயலுகளுக்கு தாங்க
இந்த குரங்குத்தனம்..
இன்னுமா புரியல..
அப்படின்னா
நீங்க தெய்வம் சார்..!

எழுதியவர் : செல்வமணி (31-Aug-16, 11:36 pm)
பார்வை : 235

மேலே