தந்தை

நீ கருவுற்ற போது அவன் கொண்ட
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை !

உன் வளர்சி பரிமாணங்கள் அவனுள்
வாரிசு தைரியத்தை ஏற்படுத்தியது !

நீ மண்ணில் பிறந்து அவனுக்கு நல்ல
தந்தை அந்தஸ்தை வழங்கினாய் !

ஆயிரம் சுமைகள் தோளில் இருந்தாலும் -
உன் சுமை அவனுக்கு பெருமைதான் !

கை பிடித்து உன்னை நடை பழக்கி - உன்
அறிவுக்கு முதல் எழுத்தை அறிமுகம் செய்தான் !

உன் வாழ்கை தரத்தை அவன் உழைப்பால்
உயர்த்தினான் அன்று தளராமல் !

இன்னும் உன் எல்லா வளர்ச்சிகளிலும்
உறு துணையாக என்றுமே உன் தந்தையாக !

ஸ்ரீவை.காதர்.

எழுதியவர் : ஸ்ரீவை.காதர். (28-Jun-11, 12:51 pm)
பார்வை : 667

மேலே